உலக செய்திகள்

14,500 அடி உயரத்தில் இருந்து தள்ளப்பட்ட சாகச வீரர் உயிர் பிழைத்தார்

அமெரிக்காவை சேர்ந்த ஒரு சாகச வீரர் 14,500 அடி உயரத்தில் வைத்து விமானத்திலிருந்து தள்ளப்பட்ட பின்னர் உயிர் பிழைத்து சாகசம் படைத்தது பார்ப்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.  அமெரிக்காவை சேர்ந்த ஒரு சாகச வீரர், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டு சுமார் 14,500 அடி...

இந்தோனேசியாவில் விமானம் மீது மோதிய மாடு

இந்தோனேசியாவில் ஓடுபாதையில் இருந்த மாடு மீது மோதியதால் விமானம் ஒன்று நிலை தடுமாறி பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் சுலவேசி தீவில் உள்ள கோரோன்டலா விமான நிலையத்தில் தரை இறங்கியது.  விமானத்தின் சக்கரம் ஓடுபாதையில்...

உயிருக்கு ஆபத்து என்ற போதும் மீசையை வெட்டாது அடம்பிடிக்கும் அப்ரிடி

பாகிஸ்தானில் வாழும் ஒரு நபர் உயிருக்கு ஆபத்து வந்த வேளையிலும் தனது மீசையை வெட்டாமல், அதனை தொடர்ந்து வளர்த்து வருகிறார்.  பெஷாவரில் வசித்து வருபவர் முகமது கான் அப்ரிடி, 48 வயதான இவர் உணவை விட முக்கியமானதாக கருதுவது அவரது மீசையை.  தினமும் அவரது மீசையை பராமரிக்க சுமார் அரை மணி நேரம்...

இந்திய துணை தூதரை அழைத்துக் கண்டித்த பாகிஸ்தான்

ஐந்து இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அப்போது பொலிசுக்கும் காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைப்பு...

500 ஆண்டுகளாக மூடியிருந்த பாரிஸ் கோபுரம் திறக்கப்பட்டுள்ளது

1500 களில் கட்டப்பட்ட ஈஃபில் டவருக்கு நிகரான கோபுரம், கட்டிய மத்திரத்திலேயே மூடப்பட்டது. இந்த நிலையில் 500 ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்ட இந்த பாரிஸ் கோபுரமானது சுற்றுலாப் பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் நாட்டில் 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியினால் செயிண்ட் ஜாக்ஸ்...

கடிநாய் வளர்த்தால் ஆயுள் தண்டனை விதிக்க இங்கிலாந்தில் பரிசீலனை

இங்கிலாந்தில் வருடம்தோறும் சுமார் 2 இலட்சம் மக்கள் நாய்கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது.  கடந்த ஆண்டுகளில் 16 பேர் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். எனவே, நாய்களை பொது இடங்களில் அலைய விடும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்...

ஈராக்கில் 6 இடங்களில் தொடர்ந்து கார் குண்டு தாக்குதல் : 41 பேர் பலி

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று 6 இடங்களில் தொடர்ந்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  சந்தைககள் மற்றும் கடை வீதிகளில் இத்தாக்குதல்கள் நடந்தன. பாக்தாத்தின் வட மேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 10 பேர்...

வேலை வாய்ப்புகளுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் இளைஞர்கள்

நல்ல வேலைவாய்ப்புகள் பெறுவதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் பழக்கம், சீன இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நன்கு படித்திருந்தாலும், அதிக சம்பளத்தில், நல்ல வேலை கிடைப்பதற்கு, முக அமைப்பும் முக்கியம் என்ற எண்ணம், சீனாவில், பெரும்பாலான இளைஞர்களிடையே...

திபெத்திய பௌத்த துறவி நேபாளத்தில் தீக்குளிப்பு

திபெத்திய பௌத்த துறவி ஒருவர் நேபாளத்தில் வைத்து தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  திபெத்தில் சீனாவின் அதிகாரத்தை ஏற்க மறுத்து வரும் திபெத்தியர்கள், தலாய் லாமா மீண்டும் திபெத்திற்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக,...

ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷுக்கு இருதய அறுவை சிகிச்சை

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷுக்கு இருதய அறுவை சிகிச்சை ஒன்று இடம்பெற்றுள்ளது.  அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ், அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.  அதற்கு முன், அவர் டெக்சாஸ் மாகாணத்தின்...

<< 24 | 25 | 26 | 27 | 28 >>