உலக செய்திகள்

புதிய பாப்பரசராக அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவு

புதிய பாப்பரசராக அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவு செய்யப்பட்டார். 20 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16 ஆம் பெனடிக்ட், கடந்த 28-ம் தேதி தனது பதவியை துறந்து வத்திக்கான்; நகரில் இருந்து வெளியேறினார்.  இதைதொடர்ந்து புதிய போப்...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப் படவில்லை; ‍கறுப்பு புகையே வெளியேறியது!

  வத்திக்கானில் நடைபெற்ற முதலாவது வாக்கெடுப்பில் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்களால் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வத்திக்கான் தேவாலயத்தின் புகைபோக்கியின் வழியாக வெளியான கறுப்பு புகை இதனை உறுதிசெய்துள்ளது. புதிய பாப்பரசர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வரை...

ஆரம்பமாகிறது போப் ஆண்டவர் தெரிவு

உலகிலுள்ள 1.2 பில்லியன்  கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரை தெரிவு செய்வதற்காக இன்று 115 கார்டினல்கள் வாக்களிக்கவுள்ளனர். ஜேர்மனைச் சேர்ந்த 16ஆம் பெனடிக்ட் தனது 85ஆவது வயதில் உடல் நிலையைக் கருத்திற் கொண்டு போப் பட்டத்தை துறந்தார். இதனால் புதிய போப் ஆண்டவரை தெரிவு செய்வதற்காக இன்று...

ஒசாமா பின்லேடனின் பேச்சாளர் அமெரிக்க பொலிஸாரால் கைது

அல்  ஹைடா போராளிகளின் பேச்சாளர் சுலைமான் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் யோர்தாவில் அல்  ஹைடா போராளிகளின் பேச்சாளர் சுலைமான் அபு ஹைத் கைது செய்யப்பட்டுள்ளமையை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 9/11 தாக்குதலின் முக்கிய பங்காளரும் ஒசாமா பின்லேடனின் மருமகனுமான சுலைமான்...

ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் எரித்திரியர்கள் சினாயில் எதிர்கொள்ளும் சித்திரவதைகள்

ஒவ்வொரு வருடமும் எரித்திரியாவிலிருந்து எகிப்துக்கு அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கானவர்களில் 17 வயது லம்லம் என்ற யுவதியும் ஒருவர். மிகமோசமான ஆட்கடத்தல் காரர்களின் பிடியில் பல்லாயிரக்கணக்கான வர்கள் தினமும் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களை கடத்துபவர்கள் குடும்பத்தினரிடமிருந்து பெருந்தொகை...

போப் பட்டத்தினை உத்தியோகபூர்வமாக துறந்தார் 16ஆம் பெனடிக்ட்

போப் ஜோன் போல் இறந்ததையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு முதல் போப்பாக தெரிவு செய்யப்பட்ட போப் 16ஆம் பெனடிக்ட் இன்றுடன் தனது பட்டத்தினை உத்தியோகபூர்வமாக துறந்தார். 85 வயதான 16ஆம் பெனடிக்ட், தனது உடல்நிலையை கருத்திற்கொண்டு போப் பட்டத்தை துறக்கவுள்ளதாக கடந்த 11ஆம் அறிவித்திருந்தார். கி.பி. 1415ஆம் ஆண்டில்...

கார்க் குண்டுத் தாக்குதலில் மாலியில் ஏழு பேர் பலி

 மாலியின் வட பிராந்திய நகரான ஹிடாலில் இடம்பெற்ற கார்க்குண்டுத்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது. இப்பிராந்தியத்தில் பிரான்ஸ் படையின் தலையீடு உள்ள நிலையில் ஹிடால் நகரின் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து துஆர் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹிடால்...

பலூன் பயணங்கள் எகிப்தில் இடைநிறுத்தம்

 எகிப்தின்  லக்ஸர் சம்பவத்தையடுத்து, பலூன் விமான பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பலூன் விமானம் தீப்பற்றி எரிந்ததில் 19 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலியாகியிருந்தனர்.  இதில் ஹொங்கொங், யப்பான், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரஜைகளே...

அவுஸ்திரேலியாவில் புயல் அபாயம் பொதுமக்கள் இடம்பெயர்வு

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் சக்தி வாய்ந்த சூறாவளி 4 தடவைகள் தாக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ருஸ்ரி சூறாவளி வேகம் படிப்படியாக நகர்ந்து வருகின்ற அதேவேளை, பாரிய வெள்ளப்பெருக்கும் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த 24...

பத்திரிகைகளில் அவதூறு - வாடிகன் புகார்!

போப் பெனடிக்ட் இம்மாதம் 28- ம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபை குறித்து, பத்திரிகைகள் வதந்திகளை பரப்பி வருவதாக, வாடிகன் புகார் கூறியுள்ளது.  16வது போப்பாக இருக்கும் பெனடிக்ட்டின் இந்த பதவி விலகும் முடிவு, பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது....

<< 33 | 34 | 35 | 36 | 37 >>