'கத்தி'க்கு வரவேற்பு: நடிகை சமந்தா மகிழ்ச்சி

'கத்தி'க்கு வரவேற்பு: நடிகை சமந்தா மகிழ்ச்சி
விஜய்யுடன் நடித்த 'கத்தி' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் நடிகை சமந்தா.
 
தெலுங்கில் பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களில் நடித்திருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த நம்மால் தமிழில் ஒரு ஹிட் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார் சமந்தா.
 
தமிழில் 'பாணா காத்தாடி' மூலம் அறிமுகமாகி 'மாஸ்கோவில் காவேரி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் எந்த ஒரு படமும் சமந்தாவிற்கு பெரிய இடத்தைப் பெற்று தரவில்லை.
 
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக 'கத்தி' படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றிருக்கிறது.
 
'கத்தி'க்கு கிடைத்திருக்கும் வரவேற்பால், "இறுதியாக தமிழில் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. கிளாமரை விட்டுவிட்டு நடிப்பதற்கு ஏற்ற பாத்திரங்களை தேர்வு செய்ய இருக்கிறேன். நல்ல ஒரு கருத்துள்ள படத்தில் இடம் பெற்றதிற்காக பெருமைப்படுகிறேன். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், அனிருத், ஜார்ஜ் ஆகியோருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
 
சமந்தாவிற்கு 'கத்தி'யைத் தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருக்கும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Create a free website Webnode