அடுத்த இரண்டு போட்டிகளிலும் டெண்டுல்கர் சதம் அடிப்பார்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (05) ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்திய முன்னாள் வீரர் பங்கஜ் ராய் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கங்குலி அளித்த பேட்டியில்,

கொல்கத்தா ரெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் தனது வழக்கமான பார்முக்கு திரும்பி சதம் அடிப்பார். இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 ரெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் வகையில் வீரர்களை வழிநடத்துவார்.

எஞ்சிய 2 ரெஸ்டிலும் இந்திய அணி வெற்றி பெறவும், ஈடன் கார்டன் மைதானத்தில் டெண்டுல்கர் சதம் அடிக்கவும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.