மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது அஜித்தின் ஆரம்பம். |
அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு இப்போது தான் முடிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற உள்ளன. படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் தீயாக வேலைசெய்து வருகிறது படக்குழு. டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் படம் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் கோயம்புத்தூர் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனம். வினய், லட்சுமி ராய், சத்யன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்த ஒன்பதுல குரு படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கோவையைத் தொடர்ந்து மற்ற ஏரியாக்களிலும் மிகப்பெரிய விலைக்குப் போகும் எனத் தெரிவதால் மகிழ்ச்சியில் இருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். |