அதிவேக வீதியில் நீதவான் வழங்கிய 1000 ரூபா கள்ள நோட்டு

அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயிலில் சென்ற அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் வழங்கிய 1000 ரூபா நோட்டு போலியானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காலியில் இருந்து வந்த நீதவான் கொட்டாவ நுழைவாயிலில் நேற்று (19) இரவு 10 மணியளவில் வெளிச் செல்லும்போது வழங்கிய 1000 ரூபா நோட்டு கள்ள நோட்டு என இயந்திரத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி குறித்த நீதவான் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

அங்குனுகொலபெலஸ்ஸ அரச வங்கியில் காசோலை மாற்றி பெற்ற பணத்திற்குள் அந்த 1000 ரூபா இருந்ததாக நீதவான் முறையிட்டுள்ளார். 

வாக்குமூலம் பெற்றதன் பின் நீதவான் விடுவிக்கப்பட்டுள்ளார்.