அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஈரான் ஒரு அச்சுறுத்தல்

அமெரிக்காவின் ராணுவ தலைமை இடமான பென்டகனில் நேற்று சட்டவல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பென்டகனின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர். 

அப்போது பேசிய ஜெனரல் மார்டின் டெம்சே கூறியதாவது:- 

ஈரான் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகளை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஈரானின் இந்த செயல்பாடுகள் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரான் உலகம் முழுவதும் உளவாளிகளை கொண்டுள்ளது. ஈரான் அதிக அளவில் ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இது உலகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.