அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவ: 127 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்தப் பனிப்பொழிவு காரணமாக சிகாகோ நகரில் 10 செண்டிமீட்டர் உயரத்திற்கு பனிக் கட்டிகள் உறைந்துள்ளன. 

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பனிப்பொழிவு மிகவும் கடுமையாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பனிக்கட்டிகள் மீது உப்புகளை தூவி பனியை உருக வைத்து வருகின்றனர், மேலும், 284 பனி அகற்றும் வாகனங்கள் சாலைகளில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றி வருகின்றன. 

சிகாகோவில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக இதுவரை 25 விபத்துக்கள் ஏற்பட்டதுடன், 127 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.