அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய நபருக்கு விக்கிலீக்ஸ் ஆதரவு

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடெனுக்கு, விக்கிலீக்ஸ் அசாஞ்சே புகலிடமாக இருக்கும் ஈக்வேடாரே வழி செய்யும் என நம்பப்படுகிறது. இதற்கு அசாஞ்சே ஆதரவாக இருப்பார் என்று கூறப்படுகிறது. 

மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து வலயத்தில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி செய்துள்ளார். 

எனினும் ஸ்னோடெனை அமெரிக்காவுக்கு நாடுகடத்த ரஷ்யாவுக்கு தற்போது சட்ட ரீதியான அனுமதி இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் கூறியுள்ளார். மறுபுறத்தில் ஸ்னோடெனுக்கு புகலிடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெனிசுவெலா கூறியுள்ளது. 

‘உலகை காப்பதற்கு வெளியிடப் பட்ட தகவலுக்காக இந்த இளைஞனை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என வெனிசுவெலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ தெரிவித்தார். 

ஸ்னோடென் தனது குடிவரவு எல்லைக்குள் வராத நிலையில் அவர் மீது உள்நாட்டு நீதிமுறையை பிரயோகிக்க முடியாது என ரஷ்யா விபரித்துள்ளது. 

எனினும் ஸ்னோடனுக்கு உதவுவதாக ரஷ்யா மீது அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை அது முழுமையாக நிராகரித்தது.