அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முடிவை 25ம் திகதி அறிவிப்பாராம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முடிவை 25ம் திகதி அறிவிப்பாராம்!
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் பொது எதிரணியின் பக்கம் தாவி வருகின்ற நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என அமைச்சர் டக்ளஸிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் பொது எதிரணியின் பக்கம் தாவி வருகின்றனர்
 
இந்நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என அமைச்சர் டக்ளஸிடம் எழுப்பப்பட்ட கேள்விக் கு எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக கட்சி தாவல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், ஊடகவியலாளர்கள் மேற்படி கேள்வியை எழுப்பினர்.
 
அதாவது ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் தொடக்கம் மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் வரையில் னைவரும் பொது எதிரணிக்கு தாவி வருகின்றனர்.
 
இந்நிலையில் கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருடன் மிக நல்லுறவை பேணிய உங்கள், நிலைப்பாடு என்ன? கட்சி தாவும் எண்ணப்பாடு ஏதேனும் உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்ட அமைச்சர் டக்ளஸ், எதிர்வரும் 25ம் திகதி பெரியளவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறேன். அதன்போது என் நிலைப்பாடு என்ன? என்பதை நான் வெளிப் படுத்துவேன் என கூறினார்.