அரசியலில் ஜாக்கிசான் அதிரடி பிரவேசம்

சீன அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக ஜாக்கிசான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதன் மூலம் அவர் வெற்றிகரமாக அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அண்மையில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்ப்பட்ட சி ஜின் பிங் எதிர்வரும் மார்ச் மாதம் சீனாவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார். 

இந்நிலையில் அவர் மக்களின் குறைகளை நேரடியாக கண்டறிந்து தீர்க்க ஒரு உயர் மட்ட அரசியல் ஆலொசனை குழுவை அமைத்துள்ளார். அதில் ஒருவராக ஜாக்கிசான் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு கடந்த ஆண்டு சிறந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோயான் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்து வீரர் ஒருவரும் இதில் நியமனம் பெற்றுள்ளனர்.

அண்மைக்காலமாக அமெரிக்க ஊடகங்களில் சீன அரசியல் தலைவர்கள் ஊழல் வாதிகள் என சாடி கடுமையான தொணியுடன் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. அப்போது நேரடியாக அமெரிக்காவின் கருத்துக்களை எதிர்த்திருந்த ஜாக்கி சான், சீன தலைவர்களை வெகுவாக புகழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.