அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி எகிப்தில் நுழையத் தடை

ஏமனை சேர்ந்தவர் தவக்கோல் கம்ரான். இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். 

எகிப்தில் சமீபத்தில் நடந்த இராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி முகமது முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் முர்சிக்கு அவரது ஆதரவாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் தவக்கோல் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க நேற்று எகிப்து வந்தார். 

தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை எகிப்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. உடனே அவர் மற்றொரு விமானம் மூலம் ஏமனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். 

இதற்கு முர்சியின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதுவே எகிப்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அடக்கு முறை அத்து மீறல்களுக்கு சான்றாகும். 

தற்போது துணை ஜனாதிபதி பதவி வகிக்கும் முகமது எல்பரேதியும் ஒரு நோபல் பரிசு பெற்றவர்தான். இது போன்ற உரிமைவாதிகள் எகிப்தில் நுழைய தடை விதித்துள்ளதற்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.