ஆசிய, உலக கிண்ணத்திற்கான இந்திய அணி விபரம்

ஆசிய, உலக கிண்ணத்திற்கான இந்திய அணி விபரம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் (பெப்ரவரி.25- மார்ச்.8) மற்றும் 20 ஓவர் உலக கிண்ண போட்டி (மார்ச்.16- ஏப்.6) வங்காளதேசத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்பட்டது. 

ஆசிய கிண்ண கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இஷாந்த் சர்மா இரண்டு போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டார். யுவராஜ் சிங் 20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் இடம்பெற்றுள்ளார். 

ஆசிய கிண்ணத்திற்கான அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்:- 

டோனி (தலைவர்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, பூஜாரா, அம்பதி ராயுடு, ராகானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே. 

20 ஓவர் உலகக் கிண்ணத்துக்கான அணியில் இடம் பெற்ற வீரர்கள் விவரம்:- 


டோனி (தலைவர்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரகானே, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மோகித் சர்மா, வருண் ஆரோன்