ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணியை வரவேற்பதற்கு இலங்கை அணி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பேலியகொடவிலிருந்து பேஸ் லைன் வீதி இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகம் வரையான வீதியில் நின்று இன்று (09) மாலை 4.30 மணி முதல் ரசிகர்கள் இலங்கை அணி வீரர்களை வரவேற்ற முடியும்.
நேற்று பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது.
ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணியை வரவேற்க ரசிகர்களுக்கு அழைப்பு
