ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் எரித்திரியர்கள் சினாயில் எதிர்கொள்ளும் சித்திரவதைகள்

ஒவ்வொரு வருடமும் எரித்திரியாவிலிருந்து எகிப்துக்கு அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கானவர்களில் 17 வயது லம்லம் என்ற யுவதியும் ஒருவர். மிகமோசமான ஆட்கடத்தல் காரர்களின் பிடியில் பல்லாயிரக்கணக்கான வர்கள் தினமும் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களை கடத்துபவர்கள் குடும்பத்தினரிடமிருந்து பெருந்தொகை பணத்தினை கப்பமாகப் பெறுகின்றனர்.

எனது பின்புறத்திலுள்ள கடத்தல்காரர்கள் எனது வீட்டுடன் என்னை தொடர்புகொள்ள வைத்து தமக்கு தேவையான கப்பத்தினை என்மூலமாக கோருகின்றனரென கூறும் அப்பெண் தனது மேலாடையை நீக்கி தனது உடம்பிலுள்ள புண்களை காட்டுகிறார்.

எனது பெற்றோர்கள் அழைப்பில் வந்ததும் கடத்தல்காரர்கள் எனது இரு தொடைகளுக்கும் நடுவில் பின்புறமாக எரியும் பிளாஸ்ரிக்கை செலுத்திய போது நான் வலியினால் அலறினேன்.
இதன்மூலம் பெற்றோருக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து அதிக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாமென நினைக்கின்றனர் எனவும் லம்லம் கூறியுள்ளார். 

இப்பெண் தொலைபேசி உரையாடலை நிறைவு செய்த போது பின்னால் நின்ற ஒருவர் தனது கையினைப் பெண்ணின் தோளில் வைக்கின்றார்.

ஷெரே, அவனது முகம் சிவப்பு வெள்ளை ஸ்காபினால் மூடப்பட்டுள்ளது. லம்லம் உடன் யன்னல்கள் அற்ற நிலத்தடி அறையில் ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்களுள் ஒருவர்.

எம்முடன் நான்கு அல்லது ஐந்து பேரை அவர்கள் இறுகக் கட்டி வைத்திருந்தனர். அந்த அறையில் நிலத்தில் சிறிதளவு நீர் வியாபித்துக் காணப்படும். அதற்கு அவர்கள் மின்சாரத்தினை பாய்ச்சும் போது நாம் அனைவரும் சமநேரத்தில் மின்சாரத்தினால் தாக்கப்படுவோமென ஷெரே கூறியுள்ளான்.

எம்மைப் பட்டினி போட்டு பசியினால் வாட்டுவார்கள். தீயினால் சுட்டுக் காயங்கள் உண்டு பண்ணுவார்கள். நித்திரைக்கு அனுமதி வழங்க மாட்டார்கள். என்னுடன் தங்க வைக்கப்பட்ட 20பேரில் 9 பேர் இறந்து விட்டனர். தப்பித்தவர்கள் விதியினால் வரவேற்க்கப்பட்டார்கள். நாமும் இறந்து விடுவோமென்றே நம்பியிருந்தோம். அதுதான் அவர்களின் சித்திரவதைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரேயொரு வழியாக இருந்தது.

இவ்வேளையில் உள்ளூர் ஷோய்க் மொஹமட் அல் மனிறி என்பவரிடன் துணையுடன் லம்லம் மற்றும் ஷெரே அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.

தனது வீட்டின் பின்புறத்திலுள்ள சிறிய கட்டிடம் இவ்வாறு மீட்கப்படுபவர்களின் தங்குமிடமாக உள்ளது. ஆனாலும் காலங் கடந்து விட்டதாக அவர் கூறுகிறார்.

மிகமோசமாக துன்புறுத்தப்பட்ட பலரை நாம் இங்கு கொண்டுவந்துள்ளோம். மீட்கப்பட்டவர்களில் சிலர் மாறாத  காயங்களினால் எனது வீட்டிலேயே இறந்துள்ளனரென ஷேய்க்  மொஹமட் கூறியுள்ளார்.

சினாயில் இடம்பெற்று வரும் இவ்வாறான ஆட்கடத்தல் வர்த்தகமானது அதிகரித்து வரும் ஒரு விடயமாக இருப்பதுடன் உலகளவில் வெளிவராத மனிதநேய நெருக்கடி என ஐ.நா. கூறியுள்ளது.
கடந்த வருடம் எரித்திரியாவிலிருந்து 3000 பேர் வெளியேறியுள்ளனர். சூடானிலுள்ள அகதி முகாம்களில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். 90000 பேர் அங்கு தங்கியுள்ளனர்.

என்னை அடித்தும் மின்சாரம் பாய்ச்சியும் துன்புறுத்திய ஆட்கடத்தல் காரர்கள் எனது குடும்பத்தினரிடமிருந்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டு என்னை விடுதலை செய்தனர் என்று மற்றொரு அகதி கூறியுள்ளார்.

நீங்களாகவே அக்கடத்தல்காரர்களின் கைகளில் விழாமலிருப்பதே சிறந்ததென கூற முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளிநாடுகளில் நல்ல வாழ்க்கையினை தேடும் பலர் இஸ்ரேல் அல்லது எகிப்தை நோக்கிய தது பயணத்தின் போது ஆயுதக் குழுக்களுடனான  கடத்தல்காரர்கள் வசம் மாட்டிக்கொள்கின்றனர்.
சிலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு குடியேற்ற வாசிகள் விரும்பும் நாடுகளில் கொண்டு சென்று விடுகின்றனர். ஏனையவர்கள் வேறு குழுக்களுக்கு விற்கப்படுகின்றனர்.

இவர்கள் சட்ட நடவடிக்கைகள் மிகவும் அரிதாகக் காணப்படும் பகுதிகளில் சினாயின் வட பகுதி பாலை வனங்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

எரித்திரிய பாதுகாப்பு படையினர் இப்பகுதியில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அவர்கள் உள்ளனர்.