ஆண் குழந்தை ஆசையில் 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கிய 55 வயது தாத்தா

பாகிஸ்தானில் ஏற்கனவே 2 முறை திருமணமான முதியவர் ஒருவர் ஆண் குழந்தைக்கு தந்தை ஆக வேண்டுமென்ற ஆசையில் 20 வயது இளம்பெண்ணை விலைக்கு வாங்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் சாஹிவால் மாவட்டத்தில் தனது இரண்டு மனைவிகளோடு வாழ்ந்துவரும் முகமது அலி என்னும் நபருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

55 வயது நபரான இவருக்கு ஆண் குழந்தைக்கு தந்தை ஆக வேண்டுமென்ற ஆசை இருந்துவந்தது. இதனை பூர்த்தி செய்துக்கொள்ள மற்றொரு இளம்பெண்ணை மணமுடிக்க எண்ணினார். 

இதற்காக பேகம் பிபி என்னும் 20 வயது இளம்பெண்ணை 1,20,000 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினார். தனது புது மனைவியோடு தனி வீட்டில் 2 நாட்களாக வாழ்ந்துவந்த முகமதை பேகம் பிபி அளித்த புகாரின் பேரில் பொலிசார் கைது செய்தனர். 

இது தொடர்பாக பொலிசில் தெரிவித்த முகமது அலி, எனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்ற ஆசை இருந்தது. இதற்காகதான் ஒரு இளம்பெண்ணை விலை கொடுத்து வாங்கினேன். எனது இரண்டாவது மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன், இந்த பெண் ஆண் குழந்தையை பெற்று கொடுத்ததும் அதனை, என்னுடைய இரண்டாவது மனைவியிடம் கொடுத்துவிட்டு இந்த பெண்ணை அனுப்பிவிடலாம் என எண்ணியிருந்தேன் என கூறியுள்ளார்.