ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் : 6 இராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ஜோர்ஜியா இராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஆறு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையில் ஜோர்ஜியா நாட்டின் இராணுவ வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனால் அந்நாட்டைச் சேர்ந்த 1500 வீரர்கள் ஹெல்மாண்டு பகுதியில் முகாமிட்டு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ஜோர்ஜியா இராணுவ வீரர்கள் ஹெல்மாண்டு பகுதியில் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வெடிகுண்டு நிரப்பிய லொரியை இராணுவ வீரர்களின் வாகனம் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் மோதி வெடிக்க செய்தனர். 

இதில், 6 இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியானதோடு, 9 வீரர்கள் காயம் அடைந்தனர். வாகனமும் தூள் தூளாக நொறுங்கியது. 

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 28 ஜோர்ஜியா வீரர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.