ஆப்கான் தாக்குதலில் 24 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதல் சம்பவங்களில் 24 பேர் பலியாகியுள்ளனர். 

காந்தகார் நகர பொலிசாருக்கு அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. 

பொலிசார் விரைந்து சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். 

அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் சிக்கி 8 பொலிசார், கைது செய்யப்பட்ட இருவர் இறந்தனர். 

குண்டஸ் மாகாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்ததில் 10 பொலிசார் கொல்லப்பட்டனர். 

கான்ஸ்னி நகரில் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் பொலிஸ் உள்ளிட்ட இருவர் இறந்தனர்.