இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் 28ஆம் திகதி தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாடவில்லை.
அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அவருக்கு முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே கெய்ல் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வெய்ன் சுமித் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய அயர்லாந்து 49.2 ஓவரில் 202 ஓட்டங்களுக்கு சுருண்டது. வில்சன் அதிகபட்சமாக 62 ஓட்டங்களை எடுத்தார்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 36.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தொடரில் கிறிஸ் கெய்ல் இல்லை
