யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபால், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மரியாதையின் நிமித்தம் துறை சார்ந்தவர்களைச் சந்திப்பதற்காகவே இவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரித்தன.
இன்று புதன்கிழமை மன்னார் மாவட்ட இராணுவ மற்றும் கடற்படை கட்டளைத் தளபதிகளை இவர் சந்திக்கவுள்ளார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் யாழ். விஜயம்
