எந்த இயக்குனராவது ஹன்சிகாவிடம், இரவு நேரத்தில் படப்பிடிப்பு என்று சொன்னாலே அலறி ஓடுகிறாராம்.
பகலில் இடைவிடாத படப்பிடிப்பு என்றாலும் தம் கட்டி நடித்துக் கொடுக்கும் ஹன்சிகா, இரவு நேரத்தில் படப்பிடிப்பு என்று சொன்னால் மட்டும், கோடி ரூபாய் கொடுத்தாலும் ஸ்பாட்டுக்கு வர மாட்டேன் என்று மறுத்து விடுகிறாராம்.
இதுகுறித்து ஹன்சிகா, இரவு நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது இனிமையான அனுபவம் தான். ஆனால் என் மனசுக்கு பிடித்த அந்த விஷயம் எனது உடம்புக்கு பிடிக்கவில்லையே.
இரண்டு நாட்கள் கண் தூங்காமல் நடித்தால், அடுத்த நாள் முகம் வீங்கி விடுகிறது. உடம்பில் எடைபோட்டு விடுகிறது.
அடுத்த நாள் வேறு படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றால் இரவெல்லாம் மது அருந்தினீர்களா? என்று தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்கிறார்கள்.
அதனால்தான் இரவு நேர படப்பிடிப்பு என்றாலே எனக்கு அலர்ஜியாகி விட்டது என்கிறார் ஹன்சிகா.