இரும்புத் திரையை தளர்த்கதிக் கொள்ளும் சுவிஸ் வங்கிகள்

இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டு அரசுகள் கேட்கும் வங்கி வாடிக்கையாளர் விவரங்களை நிபந்தனைகளுக்குட்பட்டு, தர சுவிட்சர்லாந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கு வழிசெய்யும் வரி நிர்வாக உதவிச் சட்டம், அந்நாட்டில் வரும் பிப்ரவரி 1-ம் திகதி முதல் அமலாக உள்ளது. எனினும் கேட்கப்படும் விவரங்கள் தனிப்பட்ட நபர்களுடையதாக இல்லாமல் ஒரு குழுவாக உள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 

பல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு சென்று முடக்கும் சொர்க்கமாக, சுவிட்சர்லாந்து இருப்பதாக நீண்ட நாட்களாகவே கருதப்படுகிறது. இவ்வாறு பதுக்கும் பணத்தின் அளவு அதிகரித்துவந்த நிலையில் இது தொடர்பான விவரங்களை தருமாறு பல நாட்டு அரசுகளும் சுவிட்சர்லாந்து அரசை நெருக்கத் தொடங்கின. 

இதையடுத்தே அந்நாட்டு அரசு இது தொடர்பான விதிமுறைகளில் கடுமையை தளர்த்தி தற்போதைய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.