இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய கப்பல் நீண்ட நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கிணங்க இந்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது.
இந்நிலையில் இந்த கப்பல் இலங்கை கடல் வழியாக பயணம் செய்யும் போது தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்ட எம்.வி. அமினா என்ற கப்பலே தடுத்து வைக்கப்பட்டிருந்தது.