ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி லீக் போட்டியான இன்றையதினம் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. ஐந்து அணிகள் பங்குபற்றும் இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
இதன்படி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 13 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
நான்கு போட்டிகளை எதிர்கொண்டு ஒரு தோல்வி, மூன்று வெற்றிகளை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகளை எதிர்கொண்டு எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறாது இறுதி இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி நான்கு லீக் ஆட்டங்களில் இரண்டு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை - பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை
