இலங்கை விருந்தாளிக்கு அடைக்கலம் தரலாமா இளையதளபதி?

அசின் அடிக்கடி அமெ‌ரிக்கா செல்கிறார், காரணம் அமெரிக்க வாலிபர் ஒருவரின் காதல் வலையில் அவர் எக்கச்சக்கமாக சிக்கிவிட்டார். 

அதனால் தான் ஹிந்தித் திரையுலகமே வாழ்க்கை என சென்றவர் இப்போது புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை, இவையெல்லாம் மும்பை ஊடகங்களில் சமீபகாலமாக கலைகட்டிவரும் செய்திகள். 

அவர்களையும் அப்படியே பின்பற்றின தமிழ் ஊடகங்களும். ஆனால் காதல், கல்யாணம் என்று செய்தி வந்தால் பெரும்பாலான நடிகைகள் என்ன செய்வார்கள்? 

இதற்கு முன்னர் என்னதான் அது பட்டையடிபட்ட செய்தியாக இருந்தாலும்.. இவர்களிடம் அதை கேள்வியாக கேட்கும் போது.. முதலில் அப்பொழுதுதான் அறிந்தது போல ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்கள். 

பின்னர் அப்படியெல்லாம் எதுவுமேயில்லை, கலைச் சேவைக்கே நேரம் போதாது காதலிக்க என்கெங்க நேரம், திருமணத்தை பற்றி யோசிக்கவேயில்லை, சினிமாதான் இப்போதைக்கு என்னுடைய ஒரே குறிக்கோள்.... இப்படியெல்லாம் பஞ்ச் டயலாக்குகளை அடுக்குவார்கள். 

ஒருசிலர் இன்னும் ஒரு படி மேலலே போய் விருதுகள் வாங்க வேண்டும் அதைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை என்பார்கள். 

அசினும் இதற்கெல்லாம் ஒன்றும் விதிவிலக்கல்ல.. இதே பதிலை ‌ரிப்பீட் செய்திருக்கிறார். ஆனாலும் அசின் ஒரு திறமையான நடிகை என்பதால் திருமணமா? எனக்கா? என்று ஒரு எக்ஸ்ரா அதிர்ச்சியை வேறு போட்டுத் தாக்கியிருக்கிறார். 

விருந்தாளியாக இலங்கை சென்ற அசினை தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்கக் கூடாது என அனைவரும் சொன்னபோது மலையாளியான சித்திக் அவரை தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார். 

இப்போது மீண்டும் அசின் பெயர் தமிழ் சினிமாவில் அடிபடுகிறது. அதுவும் விஜய் படம். 

இலங்கை விருந்தாளிக்கு அடைக்கலம் தரலாமா இளைய தளபதி? என்று இப்போதே தமிழ் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டன.