ஈராக் குண்டு தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு

ஈராக்கின் பல பிரதேசங்களிலும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வடைந்துள்ளது. 

ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதில் இருந்து இன தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சன்னி மற்றும் ஷியா பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று பாக்தாத் அருகே தியாலா மாகாணத்தில் உள்ள ஜுடைடா அல்-ஷாத் நகரில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதியில் 2 கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

அதே நேரத்தில் அங்குள்ள மரக்கறிச் சந்தையில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலும் நடத்தினார்கள். அதில் 13 பேர் இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். 

அதே நேரத்தில் பழிக்குபழியாக சன்னி பிரிவினர் அதிகம் வாழும் மொசூல், கிர்குக், தஜி, திக்ரித், துஷ் குர்மடோ ஆகிய இடங்களில் தொடர்ந்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

அதில் மேலும் 57 பேர் பலியாகினர். 200 பேர் காயம் அடைந்தனர். 

நேற்று நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. 

இதற்கிடையே நேற்று நடந்த தாக்குதல்களுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.ஈராக்கின் பல பிரதேசங்களிலும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வடைந்துள்ளது. 

ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதில் இருந்து இன தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சன்னி மற்றும் ஷியா பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று பாக்தாத் அருகே தியாலா மாகாணத்தில் உள்ள ஜுடைடா அல்-ஷாத் நகரில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதியில் 2 கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

அதே நேரத்தில் அங்குள்ள மரக்கறிச் சந்தையில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலும் நடத்தினார்கள். அதில் 13 பேர் இறந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். 

அதே நேரத்தில் பழிக்குபழியாக சன்னி பிரிவினர் அதிகம் வாழும் மொசூல், கிர்குக், தஜி, திக்ரித், துஷ் குர்மடோ ஆகிய இடங்களில் தொடர்ந்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

அதில் மேலும் 57 பேர் பலியாகினர். 200 பேர் காயம் அடைந்தனர். 

நேற்று நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. 

இதற்கிடையே நேற்று நடந்த தாக்குதல்களுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.