ஈழத் தமிழர் சுதந்திரத்துக்காக ஐநாவில் பொதுவாக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர் சுதந்திரத்துக்காக ஐநாவில் பொதுவாக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் தஞ்சை மாவட்ட குழு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்லூரி நீதிமன்றத்துக்கு முன்பு நின்றுகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சத்தீயமூர்த்தி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி பொது செயலாளர் மதிவாணன் சிறப்புரை ஆற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் நடைப்பெறும் ஐ.நா.சபை மாநாட்டில் ஈழ தமிழர்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும். ஈழ தமிழர்கள் சுதந்திரமாக வாழ ஐ.நா. சபை சார்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

காலை 9.15 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் காலை 9.35 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து மாணவர்கள் வழக்கம் போல் வகுப்புக்கு சென்றனர். 

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கல்லூரி முன்புள்ள சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். 

கல்லூரி முன்பு தஞ்சை நகர துணை பொலிஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.