உதயநிதி ஸ்டாலின் முதல் படத்தில் ஹன்சிகாவை காதலித்து இரண்டாவது படத்திலேயே நயன்தாராவுக்கு தாவியிருக்கிறார்.
இதனால் மற்ற நடிகர்கள் பொறாமையில் பொசுங்க, இவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்?
பவர்ஃபுல் குடும்பம் என்பதால் யாரிடம் கால்ஷீட் கேட்டாலும் அட்ஜஸ்ட் செய்து தருவார்களே தவிர அலட்ட மாட்டார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும் உதயநிதியுடன் ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது என்றொரு வதந்தியும் உலவியது.
அதனை உதயநிதியே ஆமோதித்திருக்கிறார். நயன்தாரா இது கதிர்வேலன் காதலுக்கு முன்னால்.... ஒப்பந்தமான படம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம்.
அந்தப் படத்துக்கு நயன்தாராவுக்கு தரப்பட்ட சம்பளத்தைவிட பல இலட்சங்கள் அதிகமாக இது கதிர்வேலன் காதல் படத்துக்கு கேட்டு வாங்கியிருக்கிறார்.
அந்த அதிகபடி இலட்சங்கள்தான் நயன்தாராவை கதிர்வேலனின் காதலியாக ஆக்கியிருக்கிறது.