உலக கிண்ணத்தை வெல்வதே எமது இலக்கு

அடுத்த வருடம் நடைபெறும் உலக கிண்ணத்தை வெல்வதே எமக்கு இலக்கு என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.   

உலக கிண்ணப் போட்டி எங்களுக்கு நீண்ட காலமாகவே புதிராக இருந்து வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.   

அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே எங்களது இலக்காகும். 

எங்கள் அணியில் டிவில்லியர்ஸ், பிலாண்டர், அம்லா, மோர்னே மோர்கல் உட்பட சிறந்த  வீரர்கள் உள்ளனர்.   

உலக கிண்ணம் வெல்லும் அணியில் இடம் பெற வேண்டும் என்பதே எனது ஆசை. நான் ஒரு விக்கெட் எடுக்காவிட்டாலும் தென் ஆப்பிரிக்க அணி கிண்ணத்தை வென்றால் போதும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


Create a free website Webnode