எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் கைது

 இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பகல் இவர்கள் கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயமே நெடுந்தீவு கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

இதேவேளை ஏற்கனவே 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.