ஒசாமா பின்லேடனின் பேச்சாளர் அமெரிக்க பொலிஸாரால் கைது

அல்  ஹைடா போராளிகளின் பேச்சாளர் சுலைமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் யோர்தாவில் அல்  ஹைடா போராளிகளின் பேச்சாளர் சுலைமான் அபு ஹைத் கைது செய்யப்பட்டுள்ளமையை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 9/11 தாக்குதலின் முக்கிய பங்காளரும் ஒசாமா பின்லேடனின் மருமகனுமான சுலைமான் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமெரிக்க அதிகாரிகளினால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.

2011 மே மாதம் ஒசாமா பின்லேடன் மறைவிடத்தில் வைத்து அமெரிக்க விசேட துருப்புகளால் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெள்ளிக்கிழமை 9/11 தாக்குதலில் அமெரிக்க பிரஜைகள் உயிரிழப்பதற்கு காரணமானவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சுலைமான் அபு ஹைத் அமெரிக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

அல்ஹைடாவின் முக்கியஸ்தரான சுலைமான் எல்லையற்ற முடியாட்சிக்கான பிரசாரங்களையும் கலகங்களை ஏற்படுத்துவராக இருந்தவர் என அமெரிக்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் பள்ளி வாசல் சொற்பொழிவாளராகவும் ஆசிரியராகவும் இருந்த சுலைமானின் குவைத்  பிரஜாவுரிமை 9/11 தாக்குதலின் பின்னர் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.