ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்காவில் அங்கீகாரம்

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தி்ல் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 

இருப்பினும் தலைமை நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெஞ்சு நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 

ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது என்பது அமெரி்க்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. 

இருப்பினும் உலகில் உள்ள அர்ஜென்டைனா, பெல்ஜியம், பிரேசில், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நெதர்லாந்து , நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா மற்றும் சுவீடன் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுளளது. 

எனவே அதன்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்