கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
சட்டவிரோதமான முறையில் ஆறு பசுமாடுகளை கடத்துவதற்கு பயன்படுத்திய சிறு உழவு இயந்திரத்தை 50 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக செலுத்தி மீட்டுச்செல்லுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன், வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.
 
2012ஆம் ஆண்டு கரவெட்டி மேற்கினைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமின்றி ஆறு பசுமாடுகளை சிறுஉழவு இயந்திரத்தில் ஏற்றி, நெல்லியடி பகுதிக்கு கொண்டு சென்றிருந்தார்.
 
2012ஆம் ஆண்டு நெல்லியடி பொலிஸார் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணையில் மேற்படி பசுமாடுகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் தொடர்பான வழக்கு விசாரணை  பருத்தித்துறை நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (21) எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது, நீதவான் 50 ஆயிரம் ரூபாயினை வாகனத்திற்கு அபராத தொகையாக செலுத்தி மீள பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டதுடன், அபராதம் கட்டத்தவறின் குறித்த வாகனம், ஏலத்திற்கு விடப்பட்டு, பெறப்படும் தொகை அரச உடமையாக்கப்படும் என தெரிவித்தார்.