கணவனையும் பிள்ளைகளையும் கைவிட்டு 16 வயது பாடசாலை மாணவனுடன் குடும்பம் நடத்தியதாக் கூறப்படும் 30 வயதுப் பெண்ணை ஏப்ரல் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை நீதிமன்ற தீதிவர் ரி. பெரேரா உத்தரவிட்டார்.
பொல்கம்பொல, குருந்துவத்தையைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
இப்பெண்ணுக்கும் 10 வயது மகளும் 7 வயது மகனும் உள்ளதாகவும் அவரது மகள் கல்வி பயிலும் பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனுடனே இவர் குடும்பம் நடத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
மனைவி தம்மையும் பிள்ளைகளையும் கைவிட்டு 16 வயது மாணவனுடன் குடும்பம் நடத்துவதாகவும் கணவன் முறைப்பாடு செய்ததை அடுத்து களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் திருமதி மல்கா குமாரி மேற்படி பெண்ணைக் கைது செய்துள்ளார்.
சந்தேக நபரான பெண் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி இந்த 16 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி அநுராதபுரத்தில் இருந்ததாகவும், பின்னர் மாணவனது வீட்டுக்கு திரும்பி வந்து தங்கியிருந்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.