கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்

தனது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பதுரலிய - எலமோதர - அத்வெல்தொட்ட பகுதி வீடொன்றில் கடந்த 7ம் திகதி கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் மனைவி தன் கணவரை கத்தியால் குத்தினார். 

படுகாயங்களுக்கு உள்ளான 46 வயதுடைய ரவிந்திர என்ற கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

கொலையை அடுத்து கைது செய்யப்பட்ட பெண் நேற்று (08) மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். 

அதன்போது அவரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.