கற்பழிக்க முயற்சித்தவரின் ஆண் உறுப்பை வெட்டிய தைரியமான பெண்

கற்பழிக்க முயற்சித்தவரின் ஆண் உறுப்பை வெட்டிய தைரியமான பெண்
இப்போது எல்லாம் நாம் தினமும் பார்க்கும் செய்தி எது என்றால் அது கற்பழிப்பு சம்பவமாகவோ அல்லது பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சராகவோ இருக்கும். செய்தித்தாளில் உள்ளூர், உலகம், சினிமா, விளையாட்டு என தனி பிரிவுகள் இருப்பது போல் பெண் கொடுமை என தனி பிரிவு வந்து விடுமோ என தோன்றுகிறது. 'அந்த' செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு பயம் காட்டும் சம்பவம் இந்தியாவில் நடந்து உள்ளது. 
 
இந்த சம்பவம் பீஹார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மிக்க ஒரு  பெண்ணுக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் அவளது தாய் அவளை ஒரு மந்திரவாதியை போன்ற ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். 
 
அவன் இவளுக்கு சில புதிய சக்திகள் வந்துள்ளது என கூறியுள்ளான். அவளை தனி அறைக்கு அழைத்து சென்று அவளை அனுபவிக்க நினைத்து உள்ளான். அதற்கு சம்மதிக்காத அந்த பெண்ணை கற்பழித்துள்ளான். அடுத்த நாளும் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து உள்ளான். 
 
இந்த முறை அந்த பெண் தனக்கு பாதுகாப்பாக கத்தியை எடுத்து சென்றுள்ளாள். இந்த முறை அவன் கற்பழிக்க முயற்சி செய்த போது அவனின் ஆண் உறுப்பை அவள் வைத்து இருந்த கத்தியால் வெட்டி விட்டால். உடனடியாக அவன் அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்று விட்டான். 
 
இது குறித்து அந்த பகுதி பொலிஸாரிடம் அந்த பெண்ணின் மீது ஏதாவது வழக்கு போடப்படுமா என கேட்டதற்கு , எதற்காக அவள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவளின் இந்த தைரியமான செயலை பாராட்ட தான் வேண்டும் என்றார். இது பல பெண்களுக்கு முன்னுதாரணம் ஆகும். 

Create a website for free Webnode