பங்களாதேஷ் அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மஹேல ஜயவர்தன மற்றும் ரங்ஹன ஹேரத் ஆகியோருக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாமில் இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக அஞ்ஜலோ மெத்தியூஸ்சும், உப அணித் தலைவராக தினேஷ் சந்திமாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திலகரத்ன டில்ஷான், குசல் ஜெனித் பெரரா, குமார் சங்கக்கார, அசான் பிரியன்ஜன், கித்றுவான் விதானகே, அஞ்ஜலோ பெரரா, லசித் மாலிங்க, திஸ்ஸர பெரரா, நுவன் குலசேகர, சுரங்க லக்மால், சசித்தர சேனாநாயக்க, அஜந்த மெண்டிஸ், மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் ஏனைய வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளுக்கான இலங்கை குழாமில் அஞ்ஜன் பிரியன்ஜன் மற்றும் கித்றுவான் விதானகே ஆகியோருக்குப் பதிலாக மஹேல ஜயவர்தன மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக 2வது டெஸ்டில் இருந்து விலகி ஹெரத் மற்றும் எரங்க ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.