கார்க் குண்டுத் தாக்குதலில் மாலியில் ஏழு பேர் பலி

 மாலியின் வட பிராந்திய நகரான ஹிடாலில் இடம்பெற்ற கார்க்குண்டுத்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது. இப்பிராந்தியத்தில் பிரான்ஸ் படையின் தலையீடு உள்ள நிலையில் ஹிடால் நகரின் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து துஆர் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹிடால் நகரைவிட்டு இஸ்லாமிய பேராளிகள் வெளியேற்றப்பட்ட பின்னரும் தொடர்சுற்றிவளைப்புகளும் குண்டுத்தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

வட பிராந்தியத்திலுள்ள தமது வீடுகளில் சென்று மீள் குடியேற அச்சங்கொண்டுள்ள இலட்சக்கணக்கான மாலியர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகவுள்ளனர் என ஐ.நா. மனித நேய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பொதுமக்களுக்குரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர்களை மீண்டும் வந்து குடியேறுமாறும் மாலி அரசாங்கம் அறிவித்துள்ளது.