சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவரும் குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் நாளை (19) தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கென உணவு அலோனைக்குழு நாளை கூடுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால் மாவில் க்ளோஸ்ட்ரிடியம் பொட்டலினம் என்ற பக்ரீரியா உள்ளதா என ஆராய பொரளை வைத்திய பரிசோதனை நிறுவனம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி குழந்கைளுக்கான பால் மா வகைகள் சிலவற்றை சந்தையில் இருந்து நீக்க சுகாதார அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
பொரளை வைத்திய பரிசோதனை நிறுவனம் இதுவரை இரண்டு ஆய்வு அறிக்கைகளை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ள நிலையில் நாளைய தினமும் அறிக்கை சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கைகள் கிடைத்த பின் சந்தையில் குழந்தை பால் மா தட்டுப்படு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.