கொண்டைக்கடலை சூப்

கொண்டைக்கடலை சூப்
தேவையான பொருட்கள் :
 
எண்ணெய்-1 டீஸ்பூன்
வெங்காயம்-1
கிராம்பு-1,
பூண்டு-1
வெள்ளை கொண்டைக்கடலை- 1கப்
காய்கறிகள் -1 கப் (பீன்ஸ், கேரட், பட்டாணி, கோஸ்)
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
தயிர்- 1கப்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை :
 
• வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
• காய்கறிகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கிராம்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
 
• பின்னர் தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, காய்கறிகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்..
 
• 20 நிமிடங்கள் கழித்து கொதிவந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து எலுமிச்சை சாறு, தயிர், ஆகியவற்றை  சேர்த்து கிளறவும்.
 
• கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி புதினா, கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.