கோண்டவிலில் மகனுடன் குடிக்க வீட்டுக்கு வந்தவர்கள் குடும்பத்தைக் கட்டி வைத்துக் கொள்ளை

கோண்டவிலில் மகனுடன் குடிக்க வீட்டுக்கு வந்தவர்கள் குடும்பத்தைக் கட்டி வைத்துக் கொள்ளை

 

மகனுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு குடும்பத்தினரைக் கட்டி வைத்துவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் பகுதியில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மன்னார்ப் பகுதியினைச் சேர்ந்த 4 பேர் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் நட்புடன் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இன்று இவர்கள் அவ் இளைஞனுடன் சேர்ந்து அவனது வீட்டில் விருந்து உண்பதற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு மதுபாணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் மகனை வெளியே அழைத்து தமது வடி ரக வாகனத்தில் திருநெல்வேலிப் பகுதிக்கு அவர்களில் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்துள்ளார்.

அதன் பின்னர் அவ் வீட்டில் இருந்த மிகுதிப் பேர் அங்கிருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி அவர்களின் நகைகள்இ பொருட்களைக் கொள்ளையடித்த பின் தப்பிவிட்டதாகத் தெரியவருகின்றது. மகனை அழைத்து வந்தவர் வாகனத்தில் எரிபொருள் முடிந்து விட்டது எனக் கூறி மகனை நடுவழியில் இறக்கி எரிபொருள் வாங்க அனுப்பிவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து தலைமறைவாகியுள்ளார். தற்போது பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.