கௌதமாலாவில் நிலநடுக்கம் 48 பேர் பலி

பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள கௌதமாலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 48 பேர் பலியாகியுள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நில அதிர்வால் 3 நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நில நடுக்கத்தால் 48 பேர் உயிரிழந்துள்ளனர், 155 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் நில நடுக்கத்தால் இடிந்துள்ளன. 1976க்குப் பிறகு கௌதமாலா நாடு காணும் பெரும் நில அதிர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. 1976ல் நிகழ்ந்த நில நடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்


Create a free website Webnode