சட்டத்தரணி மு.றெமிடியஸ் சி.ஐ.டியினரின் விசாரணைக்கு அழைப்பு

சட்டத்தரணி மு.றெமிடியஸ் சி.ஐ.டியினரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். வடமாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான இவர் எதிர் வரும் 3 ஆம் திகதி காலை கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் இரண்டாம் மாடிக்கு வருமாறு கேட்கப்பட்டுள்ளார்.

நேற்றுக்காலை தனது வீட்டுக்கு வந்த பொலிஸார் விசாரணைக்கான அழைப்புக் கடிதத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கையளித்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் குறிப்பிட்ட திகதியில் விசாரணைக்கு தான் சமுகமளிக்கப்போவதில்லை என சட்டத்தரணி மு.றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.