சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கைது

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கைது
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பருத்தித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 
 
இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் கிளையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவ்விருவரையும் கைதுசெய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.