பிரான்ஸின் பிரபலமான கான் திரைப்பட விழாவில் ஈரானிய நடிகை ஒருவர் கொடுத்த முத்தம் அந்த நாட்டில் (ஈரானில்) பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஈரானிய நடிகையான லெய்லா ஹடாமி விழாவுக்கு வந்தவேளை, அந்த விழாக்குழு தலைவரான கில்ஸ் ஜேகப்பை பார்த்து குசலம் விசாரித்து பேசியபோது அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.
இந்த முத்தமே சர்ச்சையை கிளறியுள்ளது. சர்வதேச விழாக்களில் கலந்துகொள்பவர்கள், ஈரானிய பெண்களின் மரியாதையை குறைக்காமல் நடக்க வேண்டும் என்று ஈரானிய துணை கலாச்சார அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், இணையத்தில் இது குறித்து கருத்துக் கூறிய பல அந்த நடிகைக்கு சாதகமாக கருத்து வெளியிட்டதுடன், அரசாங்கம் அவரை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மணமுறிவை மையக் கதையாகக் கொண்ட ஈரானிய படம் ஒன்றில் நடித்ததற்காக லெய்லா ஹடாமி பிரபலமானார்.
அந்தப் படத்துக்கு 2012ஆம் ஆண்டில், சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.