சித்தார்த்துடன் ரகசிய திருமணமா? சமந்தா பரபரப்பு பேட்டி

சித்தார்த்துடன் ரகசிய திருமணமா? சமந்தா பரபரப்பு பேட்டி

சித்தார்த்துக்கும், சமந்தாவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. 

தெலுங்கு படமொன்றில் சமந்தாவும், சித்தார்த்தும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக செய்தி வெளியானது. கோவில்களுக்கு குடும்பத்தினருடன் ஜோடியாக சென்று சாமி கும்பிட்டும் வந்தார்கள். 

இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:– 

என் திருமணம் பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக எழுதுகிறார்கள். ஒருவருடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதாகவும் கூறுகிறார்கள். 

இது உண்மையல்ல. நான் ஏன் ரகசிய திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்போது என் திருமணம் நடக்காது. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் நடக்கும் போது அதை எல்லோருக்கும் தெரிவிப்பேன். 

தெலுங்கு படங்களில் அடுத்த வருடம் முதல் நடிக்கமாட்டேன். சில தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். தெலுங்கில் நடித்த படம் ஒன்று இந்த மாதம் ரிலீசாக உள்ளது. அதன் பிறகு புது தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. என் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கிறேன். 

கதை நன்றாக இருந்தால் நடிப்பேன். சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. பீட்சா படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி உள்ளது. 

இவ்வாறு சமந்தா கூறினார்.