யாராவது ஏதும் கேட்டால், சமந்தா பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என எரிந்து விழுகிறாராம் சித்தார்த்.
சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இருவரும் காளஹஸ்தி கோயிலுக்கு சென்று வழிபட்டதுடன் பரிகார பூஜைகள் செய்தனர்.
இதனால் இருவரும் காதலில் விழுந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. எங்கு சென்றாலும் சித்தார்த்திடம் சமந்தா பற்றியே மீடியா நபர்கள் கேட்கிறார்களாம். இதில் சித்தார்த் எரிச்சல் அடைந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
அதேநேரம் சினிமாவுலக பத்திரிகைகள் ஒரு படத்தை பற்றி விமர்சிக்கலாம். நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க அவர்களுக்கு உரிமை கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துவதன் மூலம் அது எந்த வகையிலும் உலகத்துக்கு உதவப்போவதில்லை என்று எரிச்சலோடு தெரிவித்துள்ளார்.