பத்தனை பொலிஸ் பிரிவில் 14 வயது சிறுமி ஒருவர் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்துள்ளார்.
இன்றுக் காலை 10 மணியளவில் வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது தடுக்கி விழுந்த சந்தர்ப்பத்தில் ஊஞ்சல் கயிறு இறுகி சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் டிலானி பிரியதர்ஷனி எனும் பாடசாலை மாணவியாவார். இந்த சம்பவம் தொடர்பாக பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.