பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பாடசாலைக் காவலாளி கைது

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பாடசாலைக் காவலாளி கைது

 

யாழில் பிரபல சிறுவர் பாடசாலையில் கல்வி பயிலும் 9 வயதுச் சிறுமியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்பத்திய பாடசாலையில் கடமை புரியும் சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி பாடசாலைக்கு சென்று தனியாக இருந்தவேளை தோட்ட வேலை செய்யும் சிற்றூழியர் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நபர் கத்தி முனையில் சிறுமியை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த பாடசாலை நிர்வாகம் இன்று (31) காலை குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் யாழ் திருநகர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான வயோதிபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்பது வயதான இச்சிறுமி தரம் நான்கில் கல்வி பயில்கிறார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ். பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.