மொனராகலை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் கைதிகளால் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
மொனராகலை சிறையில் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசியும் குருவிட்ட சிறையில் இருந்து 6 கையடக்கத் தொலைபேசிகளும் போதைப் பொருள் பொதிகள் நான்கும் மீட்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இவ்வாறு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.